வேடிக்கையான
விளையாட்டுப் பொருளானது
என் கைக்கடிகாரம்
குழந்தைக்கு.
காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு.
வருத்தப்படாதவாறுதான் - அதைத்
திருப்பி வாங்கிக்
கட்டிக்கொண்டு வந்தேன்.
வருத்தமில்லையென்று
யார் சொன்னது என்றது
ஓடாமல் நின்ற கடிகார முள்.
பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.
(C) karthikaneya@gmail.com
Saturday, April 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
இந்த கவிதை ரொம்ப அருமையா இருக்கிறது :-)
அழகிய பொய்கள், கவிதைக்கு அழகு சேர்க்கிறது. நன்றாக இருக்கிறது கவிதை. விரைவில், எதாவது பிரபலமான இதழில் வெளியாகும் என்று நம்புகிறேன்.
அட!
//பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.
//
கடைசி வரிகள் அருமையாக இருக்கிறது தோழி
ரொம்ப பிடிச்சிருக்குங்க கவிதை.
intha kavithai rompa pitiththirukkirathu karthika.
beauty......
oho, mullukkum manam undo. simply nice
nalla parhiya oda thodangiyathu mull mattum thana,unnoda manasum odiyirukumae.
I Love You Dear.
By
Vijikka
"முள்ளும் மனமும்" (முள்ளும் மலரும் என்ற பாணியில்)இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ!
காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு
jolly-a irukku :))
அருமை
ஆஹா. எனக்கே ஆச்சரியம். நான் சொன்னதுபோலவே கல்கியில் இக் கவிதை. வாழ்த்துகள். :)
( நாங்கத்தான் சொல்றோமில்ல ஆங்)
Thanks to Vijjinna, Muthuvel, Prem, Yathra, Mankuthirai, Rajan, Syed anna, Vijikka, Surya, Veenaapponavan, Thigazhmilir
@ Muthuvel: Amam, neenga sonna mathiri nadanthathu. Thanks. Adikkadi vandhu ippadi sollunga. :)
மிக மிக அருமை
Post a Comment