மரங்களின் இலைகள் சிந்த
கதவிடுக்கில் வழிவதுபோல்
காற்று மெல்ல கசிந்து வீச
அதுவரை யாரும்
அறிந்திராத சாயலில்
மஞ்சள் வெளிச்சம்
எங்கும் பரவ
மாலையோ காலையோ என
மனம் மயங்கிய பொழுதொன்றில்
மேலெழும்பி வந்து கொண்டிருந்தது
மேற்கினின்று சூரியன்.
(C) karthikaneya@gmail.com
2 comments:
இயற்கை கவிதாயினியே!
இயற்கை விதிமுறைகளை மாற்றி எழுதிட்டீங்களே.))
குழப்பம். என்ன பொழுது அது?
மயக்கத்தினாலே திசை தெரியல போலும்!
Post a Comment