
ஆகாவழி மரம் ஒன்றும்
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும்
அரளிச் செடி ஒன்றும்
அருகருகே வளர்ந்தன
புதிதாய் வந்த தெருவில்.
ஆச்சரியப்படும் வேகத்தில்
அரளிச் செடி வளர்ந்து
அந்த மரத்தின் கையை
எட்டிப்பிடித்த நாளில்தான்
எரியத் துவங்கியது தெருவிளக்கு.
கல்யாணத் தெரு போல்
களைகட்டி விட்டது இப்போது
மஞ்சள் வெளிச்சத்தில்
நனையும் தெரு.
(C) karthikaneya@gmail.com
1 comments:
இயற்கை கவிஞர் கார்த்திகா...நல்ல கற்பனை. வாசிப்பவர்களும் காண முடியும்.
உங்க வீட்டில சீக்கிரம் கல்யாண பந்தல் போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அழைப்பிதழ் அனுப்புங்க. கூடவே விமான டிக்கட். :))
Post a Comment