Saturday, April 25, 2009

மிச்சமிருக்கும் பரஸ்பரமல்லாத ஒன்று

புறக்கணிப்புகளின் காயங்களைப்
புன்னகையின் பின்னால்
ஒளித்துக் கொண்டேன்.
கண்ணீர்த் துளிகளுக்குத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்
ஓர் இடம் - பின்
தீர்மானித்துக் கொண்டேன்
எதிர்ப்படும் ஒரு மழை நாளில்
தடயங்களின்றித்
தொலைத்துவிட வேண்டுமென்று.

பின்னொரு நாள் வந்தது
அந்த மழை நாள்
உன்னை எதிர்நோக்கியிருந்த
மழை நாட்கள்
இத்தனை கடுமையில்லை என
துக்கித்தவாறு.

திரட்டிச் சென்ற
கண்ணீர்த் துளிகளைக்
கரைத்த மழையில்
நனைந்தோ நனையாமலோ
வீடு திரும்பி
தலை துவட்டிக் கொண்டேன்.

தும்மல் எழுந்தது
என்னை நினைத்திருக்க
வாய்ப்பேயில்லாத
உன்னை
நினைவூட்டியவாறு.

(C) karthikaneya@gmail.com

10 comments:

'))')) said...

இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் புடிச்சுருக்குங்க.முதல் 3 வரிகள் மட்டும் சற்றுத் தயக்கத்துடன் பிடித்திருக்கிறது.

'))')) said...

கவிதை நல்லா இருக்குங்க.

'))')) said...

கார்த்திகா கவிதைன்னாலே அதில் மழை ஒரு முக்கிய கதாபாத்திரம்!!!

கவிதை ரொம்ப அருமை :-)

\\திரட்டிச் சென்ற கண்ணீர்த் துளிகளைக்கரைத்த மழையில்நனைந்தோ நனையாமலோவீடு திரும்பிதலை துவட்டிக் கொண்டேன்.\\

வாவ் சொல்ல வைக்கின்றன!!!

'))')) said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

Anonymous said...

nallaa iruku.

'Ennai ninaiththirukka vaaippe illaadhaa' - appidinu eppidi solla mudiyum? sila per thummaraanga. sila per irumaraanga. sila per summaa irukaraanga. adhanaala ninaikkalainu arththam aagumaa? over.

பூபதி said...

/தும்மல் எழுந்தது
என்னை நினைத்திருக்க
வாய்ப்பேயில்லாத
உன்னை
நினைவூட்டியவாறு./

இந்த வரிகள் யாரையோ குறிப்பிட்டு சொல்வது போல தெரிகிறதே கார்த்திகா?
அன்புடன்
பூபதி..

'))')) said...

Thank u Muthuvel, Muthuramalingam, Vijjinna, Yathra, Mukundh and Boopathy.
@Boopathy - Ithu verum punaivuthan, punaivuthan, punaivuthan. :)

'))')) said...

intha kavithai nalla irunkunka madem-naran

'))')) said...

/தும்மல் எழுந்தது
என்னை நினைத்திருக்க
வாய்ப்பேயில்லாத
உன்னை
நினைவூட்டியவாறு./

இது நல்லாருக்கே!!!

'))')) said...

Beautiful verses.
I stumbled across your poems while surfing. And what a find!
Tamil lives - through people like you. Best wishes.