Wednesday, April 29, 2009

தீராத் தேடல்

ஒரு முகம் தேடி
ஓயாமல் அலைகிறது
கோடைகள் தோறும் வெயில்.

இன்றும் கூட - ஒரு
தென்னங்கீற்றின்
முன் தின மழைத் துளியில்
தொடங்கிய பயணத்தில்
முன்பகலில் இளைப்பாறிக்கொண்டிருந்தது
மூங்கில் இலை நுனியில் - பின்
மெல்ல உருகத் தொடங்கியது - ஒரு
குயிலின் கானம்.

குரலின் முகம் தேடி
தகித்து எரித்து
அலைந்து களைத்து
உறங்கத் தொடங்கிய வெயிலின்
உறங்கா கேள்வி:
'அத்துவானக் காட்டில்
யாருக்கிந்த தாலாட்டு?'

கோடைகள் முடிந்தாலும் - இந்தக்
குயில்களுக்கு ஓய்வில்லை
நீ அறியாயோ வெண்வெயிலே!

(C) karthikaneya@gmail.com

5 comments:

'))')) said...

இந்த கவிதையில் ஏதோவொரு மயக்கமுறும் வித்தை இருக்கிறது. ஒரு பாடலை போல இருக்கிறது.

Anonymous said...

Romba azhagaana kavithai. Sangak kavithai padikkira maadhiri irundhadhu. :)

'))')) said...

'அத்துவானக் காட்டில்
யாருக்கிந்த தாலாட்டு?'


vaazhthugal

Boopathy said...

/கோடைகள் முடிந்தாலும் - இந்தக்
குயில்களுக்கு ஓய்வில்லை/

ஏழைகளின் உழைப்பைப் போல
பூபதி..

'))')) said...

//கோடைகள் முடிந்தாலும் - இந்தக்
குயில்களுக்கு ஓய்வில்லை //

ஆழமான வரிங்க