இரவு ரயில் பயணமொன்றில்
பேச்சினிலே பேரார்வமென்று
அந்நிய மொழியில் அறிமுகமானான்
எதிர் இருக்கை சிநேகிதன்.
'டாவின்சி கோட்
இந்திய இலக்கியங்கள்
இரவு உணவு
சென்னை ஆட்டோக்கள்
தமிழகத் தந்தை
ஜெர்மன் தாய்
இங்கிலாந்து கல்வி'
இன்னும் ஏதேதோ
ஆல்கஹால் மணம் - என்
விழிகளில் பரவப் பேசிவிட்டு
உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.
உறக்கத்தின் ஊடே - ஏதோ
உணர்வு தீண்ட
திடுக்கிட்டு விழித்தேன்.
ஒருக்களித்துப் படுத்து
உற்றுப் பார்த்திருந்தவன்
விழிகளில் சந்தித்து
'டோன்ட் வொர்ரி' - என
வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.
(C) karthikaneya@gmail.com
5 comments:
ரயில் பயணத்தில் நடக்கும் பெரும் சிக்கல் இது :(
Pala murai Rail payanathil mattumanri perunthu payanathilum naanum kooda ithu pondra mosamana anubavangalai santhithathundu. Ithu karbanai mattumae yenum patchathil magizhvane (oru sahothariyai)
//என் விழிகளில் பரவப் பேசிவிட்டு உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.//
அப்போதிருந்தே கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.
//வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.//
பொம்மை படம் போட்ட போர்வையா உங்க போர்வை? அல்லது எப்போதும் பொம்மைகள் வைத்திருப்பீர்களா?
வித்தியாசமான கவிதை முயற்சி செய்திருக்கிறீர்கள்.
அழுத்தி, குற்றம் சாட்டும் தொனியில் இல்லாமல், மென்மையாக நிகழ்வை புரியவும் வைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!!!
vaazhthugal.....
இரவில் என்னோடு விழித்திருந்தன - என்போர்வையின் பொம்மைகளும்.
bommai padimam arumaiyaa iruku.
Post a Comment