Saturday, December 20, 2008

மலையின் அழைப்பு

அதிகாலை வெயிலில்
இளமஞ்சள் பூசிநிற்கும் மலை
அழகாய் எனை மயக்கி
அழைக்கும்.
எழிலான பாதைகளை
ஒயிலான வளைவுகளை
இருபுறமும் ஓடைகளை
இளைப்பாற சோலைகளை
எனை நோக்கி வீசி
எப்போதும் அழைக்கும்.
அகல விரிந்த தோள்களில்
முகில்கள் துஞ்சும் மடியினில்
வெயிலில் ஜொலிக்கும் கணப்பினில்
சாரல் கொஞ்சும் நாட்களில்
அப்பாவை, அம்மாவை,
சகோதரர், தோழர்களை
நினைவூட்டி மயக்கி
எனை அழைத்தவாறு இருக்கும் - மலை
மாலை நெருங்கி
இருள் கவியும் பொழுதுகளில்
விழிகள் கனல
இருட்டில் உலவும்
புலிபோல் தோற்றும்.
பகலெல்லாம் நீள நடந்தும்
ஒவ்வொரு இரவிலும்
தோற்றுப்போய் மீளும்
என் பயணங்களை
வெவ்வேறு விழிகளில்
பார்த்தவாறே உள்ளது
மலைப்புலி.
மலைக்கும் உண்டு
சில விழிகளும்
ஒரே இரவும்.

(C) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

மலையில் அழைப்பை ஏற்று வந்தோம்.

//எழிலான பாதைகளை
ஒயிலான வளைவுகளை
இருபுறமும் ஓடைகளை
இளைப்பாற சோலைகளை//

அட்டகாசம். கவித்துவம் வீசுகிறது மலை எழிலில்.

'))')) said...

Excellent.

Karthika you are wasting your time by putting all these in your blog. You should have sent this to some Tamil Weekly. Your kavithaikaL need much larger reader community.

'))')) said...

\\அதிகாலை வெயிலில்
இளமஞ்சள் பூசிநிற்கும் மலை\\

ஆஹா!!

\\இருபுறமும் ஓடைகளை
இளைப்பாற சோலைகளை
எனை நோக்கி வீசி
எப்போதும் அழைக்கும்.\\

அதீத கற்பனை!!

\\பகலெல்லாம் நீள நடந்தும்
ஒவ்வொரு இரவிலும்
தோற்றுப்போய் மீளும்
என் பயணங்களை
வெவ்வேறு விழிகளில்
பார்த்தவாறே உள்ளது
மலைப்புலி. \\
அதெப்படிட மலையை புலியோடு ஒப்பிடுவது. புரிரயலையே! நீங்க கவிதை மட்டும் சூப்பரா எழுதிட்டு அதற்கு விளக்கம் கொடுக்கலைன்னா பாதி தான் புரியுது.

'))')) said...

மலையை என்னால் நித்தியபூவாக பார்க்க முடிந்தது.எப்போதும் பூத்திருக்கும் இந்நித்திய பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம் என எழுதின நினைவு..நீங்கள் விழிகள் கனலும் புலியாய் பார்த்திருப்பது நன்று..

'))')) said...

Thank u Sathanga, Vijjinna and Ayyanar. :)

'))')) said...

Vijjinna, neenga oor pakkam vandhu romba naal achu illa, athu than puriyala. Night travel-la Cheranmahadevi thandinathum Pothigai malai-yai paarththa ungalukkum appadi thonalam. Ana intha malaiyin azhaippula malai oru kuriyeedu than.

'))')) said...

from vee.ramasamy.malaiyen azhippu mattrmullakavithikal nantru.neenga nalla vaasakar
enpathu therikirayhu.