Saturday, December 20, 2008

பாவம் என் தனிமை

வெற்றுத் தரையில்
வெயிலைக் குறிவைத்து
மொட்டை மாடியில்
இறங்கின சில புறாக்கள்.
நான் விசிறிப்போட்ட
நினைவுகளை - அவை
கொத்தத் துவங்கியபோது
குருதி வழிய
விலகிச் சென்றது
என் தனிமை.

(C) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

//நான் விசிறிப்போட்ட
நினைவுகளை - அவை
கொத்தத் துவங்கியபோது
குருதி வழிய
விலகிச் சென்றது
என் தனிமை.//

அச்சச்சோ ....எவ்வ்ளோ கஷ்டம் இந்தத் தனிமை.....
அன்புடன் அருணா

'))')) said...

கவிதை என்பது ஒரு காட்சியினூடாய் ஏற்படுத்தும் பிரம்மிப்பு / அதிர்வு என்பதுதான் என் நம்பிக்கைகளாக இருக்கிறது..இந்தக் கவிதை நல்லதொரு உதாரணம்..

'))')) said...

thanimai thuraha prayathanikkayil, aduthamurai nichayam un varigal ninaiverum