Wednesday, December 10, 2008

மிகச் சிறிய மாற்றம்

நெடுநாள் கழிந்து
சென்றபோதும்
நேற்றுதான்
பார்த்தது போல்
இருந்தது
எனது ஊர்.
எந்த மாற்றமும் இல்லாமல்
எல்லாரும்
எல்லாமும்.
பறவைகள்
மனிதர்கள்
பாதைகள்
நதி
உதயம்
அஸ்தமனம்.
ஒன்றும் பெரிய மாற்றமில்லை
சாலைகள் கொஞ்சம்
கருத்திருந்தன
மலைகள் கொஞ்சம்
மெலிந்திருந்தன
என்பதைத் தவிர.

(c) karthikaneya@gmail.com

2 comments:

'))')) said...

ஓ அப்படியா இப்போ ஊருக்கு வந்திருக்கீங்களா?

'))')) said...

ம்.. மிகச்சிறிய மாற்றங்கள்தான். :-))