Tuesday, June 24, 2008

மழை நாளில் உலா வந்த காற்று

மழை இரயிலேறிச் சென்றபின்
உலர்ந்து கொண்டிருந்தது
கல் இருக்கைகளில்
உலாத்தியவாறு காற்று.

11 comments:

'))')) said...

\\கல் இருக்கைகளில்
உலாத்தியவாறு காற்று.\\
இந்த உவமை எனக்கு புரியவில்லையே. விளக்க முடியுமா? என்னடா இவன், நக்கீரன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கறானேன்னு நினைக்காதீங்க.

'))')) said...

(உலாத்தியவாறு என்றால் உலவியவாறு என்று பொருள்). காற்று உலாவப் போன போது மழையில் நனைந்து விட்டது. அந்த மழை அப்போது வந்த இரயிலில் ஏறி அடுத்த ஊருக்குப் போய்விட்டது. நனைந்து போன காற்று இரயில் நிலையத்தின் கல் இருக்கைகளில் அங்கும் இங்கும் உலவி தன்னைத் தானே உலர்த்திக் கொண்டதாம். அதோடு கதை முடிஞ்சுதாம். கத்தரிக்காய் காய்ச்சுதாம். எப்படி. கதை நல்லா இருக்குதா?

'))')) said...

கார்த்திகா,
அப்பா நாலே வரியில் எவ்வளவு பெரிய கதையைச் சொல்லியிருக்கீங்க!
கதை முடிஞ்சது கத்தறிக்காய் காய்ச்சது
இடி இடிச்சது
என்னடியத்தேன்னாளாம்!
எங்க பாட்டி இந்த பழமொழி சொல்லிக்கேட்டிருக்கேன் :)

அன்புடன்,
விஜய்

நெல்லையில் எங்கே இருக்கீங்க?

'))')) said...

For the past one year, in Ambasamudram.

'))')) said...

ஊர் பேர் சொல்றதைச் சொல்லிட்டேன். ஆனால் என்ன பிரச்சினையா இருந்தாலும் பேசித் தான் தீர்த்துக்கணும். சரியா? உங்கள் சுவாரஸ்யமான தளங்களில் சேர்த்ததுக்கு நன்றி. அப்புறம் இந்த தளத்தின் பெயர் "நேய முகில்". அதையும் கொஞ்சம் சரி பண்ணிடுங்க.

'))')) said...

அம்பாசமுத்திரமா. அழகு கொஞ்சும் ஊர்.
எனக்கு பூர்வீகம் உங்க பக்கத்து ஊர் தான்; கல்லிடைக்குறிச்சி. என்னுடைய பழைய பதிப்புகளையெல்லாம் படிச்சிருந்தால் தெரிந்திருக்கும். போன மாதம் கூட கல்லிடைக்குறிச்சி வந்திருந்தேன்.
http://dubukku.blogspot.com படிச்சுப்பாருங்க. அவரும் அம்பை தான்.

'))')) said...

எழுத்துப் பிழையை சரி செஞ்சாச்சு.

'))')) said...

Vijay, Tirunelveli is my native place. But I'm happy in Ambasamudram as well as in Tirunelveli. U r right, Vijay. It is a formal word to say that Ambasamudram is beautiful. But it's really more than that, I think.

'))')) said...

Ambai is an amazing place. With Manimuthar and Papanasm so close, it is a paradise to live out there.

'))')) said...

அம்பாசமுத்திரமும் பார்த்ததில்லை...கல்லிடைக் குறிச்சியும் தெரியாது...மழை பிடிக்கும்.மழை பற்றி எதுவும் பிடிக்கும்...அதனால் வந்தேன்..நல்லாருக்கு...கவிதையைச் சொன்னேன்
அன்புடன் அருணா

Anonymous said...

Nice image. I have seen a rain that has taken a train and left :)