Friday, June 13, 2008

"விரைவுப் பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கிறது
ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்."
விஜய் @ vettivambu said, "ஆஹா நெல்லைச்சீமையிலிருந்து ஒரு வலைப்பதிவாளரா? மிக்க மகிழ்ச்சி. இதென்ன ஹை-கூ கவிதை ரகமா?".
இந்த கவிதை ஹைக்கூ அல்ல. ஒரு அனுபவத்தை நமக்குத் தந்த நிகழ்வை மட்டும் வெளிப்படுத்துவது தான் ஹைக்கூ. "வாசகனின் மனமாகிய குளத்தில் கல்லை எறியும் ஒரு கவிஞனின் முயற்சி ஹைக்கூ. கல்லை எறிவது தான் கவிஞனின் வேலை. அதன் பின் எழும் அலைகளையும் அவனே வரைந்து கொண்டிருக்கக் கூடாது. அதை வாசகனின் சுதந்திரத்துக்கு விட்டு விட வேண்டும் ". இதுவே ஹைக்கூவின் அடிப்படைப் பண்பு. மற்றபடி மூன்று அடிகளில் இருக்க வேண்டும். ஐந்து, ஏழு, ஐந்து அசைகளில் அமைக்க வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் கூட நவீன ஹைக்கூவில் தளர்த்தப் பட்டுவிட்டன. எனவே இந்த "முன் செல்லும் இதயம்" கவிதையை இப்படி ஹைக்கூவாக மாற்றலாம்.

பயணம்
விரைவுப் பேருந்தின் முன்
பறந்து கொண்டிருக்கின்றது
பட்டாம்பூச்சி.

இது ஹைக்கூவாக இருக்கலாம் என்று நம்புகிறேன் . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

1 comments:

'))')) said...

யப்பா!! இதென்ன ஹைகூ ரகமா என்று நான் ஒரு சின்ன கோடு தான் போட்டேன். அதற்கு இப்படி ஒரு பெரிய விளக்கம் கொடுத்து ஒரு National Highway range'க்கு பதில் எழுதியிருக்கீங்க.
நமக்கு கேள்வி மட்டும் கேட்கத்தெரியும்'னு நினைத்தேன். இப்போ அது கூட உருப்படியா இல்லையா? ஆஹா!
ஹைகூன்னா என்ன என்பதையும் விளக்கி அதற்கு ஒரு உதாரணம் கொடுத்ததுக்கு ரொம்ப தான்க்ஸ்.
என் வலைதளம் வந்ததற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
விஜய்