Friday, June 27, 2008

தரப்படும் <=> அன்பு <=> பெறப்படும்

கூறப்பட்ட நன்றிகள்
திருப்பித் தரப்படும்.
அளிக்கப்பட்ட விட்டுத்தரல்கள்
அங்கீகரிக்கப்படும்.
கோரப்பட்ட மன்னிப்புகள்
ஏற்றுக்கொள்ளப்படும்.
அளிக்கப்பட்ட மன்னிப்புகள்
மதிக்கப்படும்.
காயப்பட்ட மனங்கள்
நேசிக்கப்படும்.
சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகள்
புரிந்துகொள்ளப்படும்.

16 comments:

'))')) said...

வணக்கம்

கவிதை நன்றாக இருக்கின்றது

ஆனால் நீங்கள் கவிதையில் கூறிய எதுவும் நடக்காது

இவ்வாறான கட்டுருத்தல்களுடன் வாழ்வை தொடராதீர்கள்

மறுபடியும் யோசித்துப்பாருங்கள்

நன்றி

'))')) said...
This comment has been removed by the author.
'))')) said...

கவிதை நல்லா இருக்கு..

எழுந்திருங்க கார்த்திகா எழுந்திருங்க:-)

'))')) said...

வூட்டுல யார் கூடனாச்சும் சண்டைங்களா?

'))')) said...

வணக்கம் இராஜராஜன். உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் கவிதையில் கூறியிருப்பது என்னுடைய எதிர்பார்ப்புகளைத்தான். என் வாழ்க்கையைச் சின்ன சின்ன எதிர்பார்ப்புகளுடன் தான் வாழ்கிறேன். ஆனால் அவை என்னை மட்டும் சார்ந்த எதிர்பார்ப்புகள். அவை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் வாழ்வில் சுவை கூட்ட உதவிவிடும். ஆனால் இந்த கவிதையில் கூறியுள்ள எதிர்பார்ப்புகள் என்னை மட்டும் சார்ந்ததல்ல என்று அறிவேன். அது இந்த சமூகத்தைச் சார்ந்தது. சொல்லப் போனால் நானும் அதில் ஓர் அங்கம் தானே. என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னுடைய இந்த எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடும். ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. புரிந்து கொண்டால் கூட அதை இந்த கவிதையின் பயனாக எண்ணி மகிழ்வேன்.

இந்த கவிதையின் தலைப்பு பற்றிய என்னுடைய கருத்தையும் வெளியிட விரும்புகிறேன். தலைப்பின் மூலமாக அன்பை வெளிப்படுத்துவதில்தான் அதன் பயன் இருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன். ஆனால் பின்னர் வாசிக்கையில் அதில் கொஞ்சம் கருத்து மாறுபட்டிருப்பது போல் தோன்றியது. திரும்பப் பெறப்படும் என்று எண்ணித் தரப்படும் அன்பு வியாபாரமாகிவிடும். திருப்பித் தரப்பட வேண்டாம் என்றே கொடுக்கப்படும் அன்பு உபகாரமாகிவிடும். இந்த அன்பின் இயல்பு தான் என்ன என்றால் இதற்கு "அன்பு இயல்பாக மலர்வது. அதைக் கற்பிக்க இயலாது. பயிற்சி செய்யவும் முடியாது" என்ற யாரோ ஒருவரின் சிந்தனையைத் தான் எண்ண வேண்டியிருக்கிறது.

(நீங்கள் வாழ்க்கையைத் தொடர்வது பற்றி பேசுகையில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தமிழவனுடைய "ஜி கே எழுதிய மர்ம நாவல்" கதையை வாசிக்கும் அனுபவத்தோடு, வாழ்கின்ற அனுபவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரொம்ப சுவராஸ்யமாக இருக்கும், எனக்கு.)

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. உங்களை அடிக்கடி வரவேற்கிறேன்.

'))')) said...

No any clash in home, Vijay.

Thanks to Mukundan & Vijay for continuous encourage. :)

'))')) said...

\\உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் கவிதையில் கூறியிருப்பது என்னுடைய எதிர்பார்ப்புகளைத்தான்\\

ஓ அப்போ நீங்க கவிதையில் சொல்லியிருப்பதெல்லாம் உங்க எதிர்பார்ப்பு தானா? எங்க நீங்க தான் இப்படியெல்லாம் நடந்துப்பீங்களோன்னு நினைச்சேன்.
என்னடா இந்த பொண்ணுங்கள்லாம் மாறிட்டாங்களா? உலகம் அழிஞ்சுடுமேன்னு நினைச்சு பயந்தே போயிட்டேன். நல்ல வேளை. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு சொல்லி உலகத்தை காப்பாத்திட்டீங்களே, வாழ்க உங்கள் புகழ் :)

'))')) said...

I didn't mean in that way,Vijay. I came to say that I don't expect anyone to do so but myself. I expect me to follow the things I said. And, ofcourse, I'm trying to keep my words and I think, I do well. But I don't know the other things u said about girls and world. Believe me. :)

'))')) said...

\\I came to say that I don't expect anyone to do so but myself. I expect me to follow the things I said.\\
இது தத்துவம் :)

'))')) said...

வணக்கம் கார்த்திகா
கொஞ்சம் பணிச்சுமை அதிகம், அதனால் தாமதம்

தங்கள் மறுமொழிக்கு நன்றி

\\புரிந்து கொண்டால் கூட அதை இந்த கவிதையின் பயனாக எண்ணி மகிழ்வேன். \\

இவ்வகை கவிதைகள் புரிந்துகொள்ள மட்டுமல்ல, அவரவர் வாழ்வில் பொருத்தி பார்க்க வேண்டும் அந்த ஆதங்கத்தில் வந்த்துதான் என் முதல் பின்னூட்டடம்

நன்றி நலமற்ற மக்கள் சமுதாயத்திலே வாழ்கிறோம் நாம் -- பெரியார் சொன்னது ( என் சொந்த கருத்தும் அதுதான்) அதனால் அவற்றை மற்றவரிடம் எதிர்பார்பது தவறு என நிணைக்கின்றேன்

\\"அன்பு இயல்பாக மலர்வது. அதைக் கற்பிக்க இயலாது. பயிற்சி செய்யவும் முடியாது"\\
ஆம் ......... அப்படி இருந்தால்தான் அது அன்பு

\\"ஜி கே எழுதிய மர்ம நாவல்" \\
படித்த்தில்லை முடிந்தால் நாவல் பெயர் கொடுங்கள் தேடிப்பார்கிறேன்

நன்றி

'))')) said...

"GK Ezhuthiya marma novel" is only the name of the novel. Written by Thamizhavan. That novel is too different to read as well as it's title, I think. If can, try that. Thank u for ur reply. :)

'))')) said...

வணக்கம் கார்த்திகா.
கவிதை மிக நன்றாகவே இருக்கிறது.
நிச்சயமாக எதுவுமே சாத்தியமாகக் கூடியவைதான்.
Yours poem gives a Positive approach.

'))')) said...

Thank u, Anthonymuthu for visit this blog.

'))')) said...

சும்மா பின்னிட்டேடா கார்த்திகா!!!
அன்புடன் அருணா

'))')) said...

யதார்த்தத்தில் இது போன்று நடப்பதில்லை..
:(

'))')) said...

நல்ல கருத்துக்கள்:).. ஆனால் பைபிள் நடையில் இருக்கு :)