Saturday, June 14, 2008

உயிர்களிடத்து அன்பு

சிறகு முறிந்த பட்டாம்பூச்சி ஒன்று
வெயில் தகிக்கும் சாலையில் உயிர் விடுவதை
விரையும் வாகனங்களுக்குப் பயந்து
வீதியோரம் நின்று மௌன சாட்சியாக
நான் பார்த்த அன்று
கனவில் வந்து விட்டுப் போனார்
முறுக்கிய மீசையோடு சிரித்தவாறு பாரதி.

6 comments:

'))')) said...

kindness i.e.karthikaranjan

'))')) said...

பாரதி சிரிச்சா எப்படி இருக்கும்? யாராவது ஒரு கற்பனை sketch போட்டு கொடுத்தா நல்ல இருக்கும்.

ஆனால், இந்த கவிதைக்கும் பாரதிக்கும் என்ன சம்பந்தம். மன்னிச்சுக்கோங்க கார்திகா, நான் 5ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கேன். அதனால பாரதி பற்றி நிறைய தெரியாது.

'))')) said...

"உயிர்களிடத்து அன்பு வேணும்"- அப்படினு சொன்னது பாரதியார். அவருடைய பாடல்களை படிக்க மட்டும் படிச்சுட்டு, இப்படி ஒரு பட்டாம்பூச்சி சாகறதைப் பார்த்துட்டு நின்ன என்னைப் பார்த்து அவர் சிரிக்கத்தான் செய்வார்.

'))')) said...

ஒஹ்! பாரதியார் இப்படியெல்லாம் படியிருக்காறா? நீங்க சொல்லித்தான் தெரியும். நன்றி

By the way, font size பெரிசாக்கினதுக்கு ரொம்ப நன்றி.

'))')) said...

:)))) Nice kavithais... Nammoorla irunthu periya periya kavinjarshalellaam vareenga... romba santhosamaa irukku :))

Innum neraya ezuththa vaazthukkal :)))

'))')) said...

நல்ல கவிதை..