Tuesday, March 31, 2009

இரவுப் பறவையும், நானும், பிறையும்

"முதன்முதலாய் உன்னை
இப்போதுதான் பார்க்கிறேன்" என்றேன்
ஒரு மூன்றாம் பிறையிடம்.
"நானும் தான்" என்றது.
நான் பார்த்த பிறையைப்
பார்க்க வந்தமர்ந்தது ஓர் ஆந்தை.
அதையும் அப்போதுதான்
பார்க்கிறேன் என்றேன்.
"ஆமாம் நானும்" என்றது பிறையும்.

(C) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

இந்தக் கவிதை படிக்க மனதில் ஆழந்த சலனங்களை உருவாக்குகிறது. இயற்கையை இன்னும் கவிப் பொருளாக கொள்ளும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியம்

மனுஷ்ய புத்திரன்

Anonymous said...

இந்த கவிதையின் பாடும்பொருள் வியக்கவைக்கிறது.

இயற்கை கவிஞரை வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்

'))')) said...

நல்லா இருக்குங்க கவிதை

'))')) said...

அருமையாக இருக்கிறது.

ரசித்தேன்.

'))')) said...

aandhai endra sol prayogam thanithu nirkkirathu...

vaazhthugal

'))')) said...

"ஆமாம் நானும்" என்றது பிறையும்

மிக மிக அருமை ங்க.

Anonymous said...

ipathan 1st time ipadi oru kavithaiyai padikiren endren kavithai idam,
athuvum thirupi athaye sonnathu enidam