Monday, March 09, 2009

என் கோப நிலா


தற்செயலாய்
வானம் பார்க்க நேர்ந்த
மூன்றாம்பிறை நாளில்
என்னைக் கண்டதும்
தென்னங் கீற்றுகளின்
பின்னோடி - மேகத்தில்
முகம் மறைத்தபோதுதான்
நினைவெழுந்தது
'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.

(C) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

வண்ணதாசனின் நிலாப்பார்த்தல் வாசித்திருக்கிறீர்களா

ஏதேச்சையாய் இப்படி பார்த்தது போக
நிலா பார்க்க என்று நிலாப்பார்த்து
எவ்வளவு நாளாயிற்று

என எழுதியிருப்பார்,

இப்படி தான் இந்த உலகின் சௌந்தர்யங்களை
கண்டு கொள்ளாமல்
கடந்து விடுகிறோம்,

'))')) said...

நிலாப்பார்த்த ஞாபகம்...

Anonymous said...

அடடா...நிலா என்னைப் பார்த்து மறைஞ்சிடுச்சினா, அது கோபபடுது என்று புரிந்துகொள்வேன் இனிமேல்.

அருமை...கவிஞரே!