Saturday, August 23, 2008

விடுதிக் குறிப்பு

நான்காம் வேற்றுமைக்குச்
சான்று தரச் செல்லவில்லை.
எழுதுகோல் வாங்கத்தான் சென்றேன்.
என்றாலும்
'வீட்டுக்கு, வீட்டுக்கு' என
எழுதிப் பார்த்தேன்.
விடுதியில் இருக்கிறேன் நான் இப்பொழுது.

6 comments:

'))')) said...

எனக்கு இது சுத்தமா புரியலை !!

விளக்கம் தேவை!!!

'))')) said...

ஹாஸ்டல் ல்ஃபின் தனிமை பற்றிய கவிதையா??
வீட்டு ஞாபகத்தில் எழுதியதோ?
எனக்கு வரிகளின் அர்த்தம் அவ்வளவாக புரியவில்லை,
மன்னிக்கவும்:(

'))')) said...

நல்ல கவிதை..
:)

லீவு போட்டுட்டு வீட்டுக்கு கெளம்புங்க..
;)

'))')) said...

அடடே வீட்டை விட்டு இருந்தா தான் அருமை தெரியுது :((

'))')) said...

//நான்காம் வேற்றுமைக்குச்
சான்று தரச் செல்லவில்லை.
//

கவிதை லைட்டா புரிலயன்னாலும்.... கருத்து அழகா இருக்கு

'))')) said...

தமிழில் நான்காம் வேற்றுமை உருபு 'கு'. வீடு என்ற பெயர்ச் சொல் நான்காம் வேற்றுமை உருபை ஏற்கும்போது 'வீட்டுக்கு' என மாறும். இவ்ளோ விளக்கம் போதுமா, விஜய் அண்ணா? :) கவிதை லைட்டா புரியல-னு சொன்ன பிரேம்குமாருக்கும் இதைத் தெரிவிக்கிறேன். நல்லா இருந்தது-னு சொன்னதுக்காக இல்ல நிஜமாவே உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி. :)