Saturday, August 02, 2008

ஐந்து மிடறு தண்ணீரின் விலை

சுற்றுலா தலமல்லாத
ஓர் அணைக்கட்டுக்கு
வேனிற்கால முடிவில் சென்றோம்
கல்விச் சுற்றுலா.
வெந்நீரைத் தேக்கி வைத்தது போல்
வெக்கை தந்தது அணைக்கட்டு.
பிள்ளைகள் வந்திருப்பதைக் கண்டு
பின்தொடர்ந்து மலையேறி வந்திருந்தார்
அந்த ஐஸ் கிரீம் விற்பவர்.
சுற்றி அலைந்து ஐஸ் கிரீம் விற்று விட்டு,
சற்று மர நிழலில் இளைப்பாற அமர்ந்தவர்,
"தண்ணீர் இருக்குதா?" என்றார்.
என் சின்ன பாட்டில் தண்ணீரை
ஐந்து மிடற்றில் குடித்து விட்டு,
புன்னகை வழிய வழிய நிரப்பிய
இரண்டு ஐஸ் கிரீம் தந்தார் இலவசமாக.
இரண்டு ஐஸ் கிரீம்களை விட
இனிமையாக இருந்தது
வியர்வையில் நனைந்த அந்த
உ(வ)ப்பான புன்னகை என்று
இப்போது தோன்றுகிறது.
ஐந்து மிடறு தண்ணீரின் விலை
ஆயுட் பரியந்தம் நினைவில் நிற்கும்
அந்தப் புன்னகை.

12 comments:

'))')) said...

நல்லா இருக்கு..
:)

'))')) said...

அருமையான சிந்தனை - கவிதை அருமை - தேவைப்படும் இடத்தில் தான் உதவியின் பெருமை தெரியும்

நல்வாழ்த்துகள்

'))')) said...

அடுத்த அடுத்த வரிகளில் வருவதால் கவிதை அருமை என்றே சொல்லிக்கிறேன்.:))

சும்மா தமாசுக்கு

'))')) said...

உங்களை பற்றி தமிழ்மாம்பழம் வலைசரத்தில் எழுதி இருக்கிறார்.

அதன் மூலம் வந்தேன்.

http://blogintamil.blogspot.com/2008/08/blog-post_3353.html

'))')) said...

Thank u, Saravana and Cheena.

'))')) said...

Thank u , Kusumban. Ur comment matches ur nick name. Anyway thank u once again for ur comments. :)

'))')) said...

\\வேனிற்கால முடிவில் \\
ஆஹா எப்படியொரு அழகான வார்த்தை பிரயோகம்.

நம்ம மக்களெல்லாம் இப்போ சம்மர் வின்டர்ன்னு பேச ஆரம்பிச்சுடாங்க. :(

\\வெந்நீரைத் தேக்கி வைத்தது போல்
வெக்கை தந்தது அணைக்கட்டு\\
அம்மணி இது கொஞ்சம் உதைக்குதே. என்ன தான் கோடை காலமாயிருந்தாலும், காலை வேளைகளில் தண்ணிர் குளிற்சியாகவே இருக்கும். இருந்தாலும் உங்கள் கவிதை நடை, ரசிக்கும்படியா இருக்கு

'))')) said...

//ஐந்து மிடறு தண்ணீரின் விலை

Nice!

'))')) said...

Hi Vijay anna,We'd gone by bus from Tirunelveli to there and we reached there at 11.00 or 11.30 AM, I think.So that we found the water as hot.I can't remember all the incidents happened there but the picnic was never forgettable.:)

'))')) said...

Thank u,Karthik

'))')) said...

Hi Vijay anna,We'd gone by bus from Tirunelveli to there and we reached there at 11.00 or 11.30 AM, I think.So that we found the water as hot.I can't remember all the incidents happened there but the picnic was never forgettable.:)

'))')) said...

Thank u, Karthik.