அந்திச் சூரியன்
அலுவல் நேரம் தாண்டியும்
அகலாமல் நின்றது மேற்கில் -
ரசிக்கப்படாத ஏக்கத்தில்.
அனிச்சையாய் நகரும் கூட்டத்தில்
பரபரப்பான கடைவீதியின்
சாலையைக் கடக்கையில்
தற்செயலாய்
திரும்பிப் பார்த்து
திகைத்து நின்றபோது
ஸ்தம்பித்தது போக்குவரத்து.
புன்னகைத்தவாறே
கீழிறங்கத் தொடங்கியது
சூரியன்.
(C) karthikaneya@gmail.com
7 comments:
உங்கள் பார்வை பட்டு
சூரியனே! ...
உயிரோசையில் வாசித்தேன். நல்லா இருக்கு. மிகவும் ரசித்தேன்.
\\கூட்டத்தில்பரபரப்பான கடைவீதியின் சாலையைக் கடக்கையில்தற்செயலாய்திரும்பிப் பார்த்துதிகைத்து நின்றபோதுஸ்தம்பித்தது போக்குவரத்து.
புன்னகைத்தவாறே\\
இயற்கைக் கவிஞர் நீங்கள் :-)
புது டெம்பிளேடெல்லாம் அசத்தலா இருக்கு :-)
பொறுத்தமாக புகைப்படம் இருந்ததால் இன்னும் ரசிக்க முடிந்தது :-)
//ரசிக்கப்படாத ஏக்கத்தில்.//
----------------------------
அருமை.. இந்த வரி என்னமோ செய்கிறது. சொல்லத் தெரியவில்லை...
அருமை. மிகவும் ரசித்தேன்
சூரியனுடன் இந்த கவிதையும் புன்னகைப்பதாய் படுகிறது .. வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு
Post a Comment