Monday, May 11, 2009

சந்தேகத்துக்குரிய 'உயிர்த்தோழி'

ஒரு கார்காலத்தின் முதல்நாளில்
மழையின் வண்ணம் குறித்து
விவாதிக்கத் தொடங்கினோம்.

இளந்தூறலாகத் தொடங்கிய மழை
வானவில் எழும் முன்
கரைந்துபோனது.

அடுத்தடுத்த நாட்களிலும்
காணக்கிடைத்த
மழைக்கான சாத்தியக்கூறுகளை
மறுத்த நீ
இடியையும் மின்னலையும்
என்னிடம் அனுப்பிவைத்தாய்.

நிலை மீளும் முன் - ஒரு
வானவில்லையும்
வரைந்து பரிசளித்தாய்.

நம் முதல் நாள் உரையாடலில் - நீ
உயிர்த் தோழி என்றுரைத்த சொற்கள்
இப்போது - மெல்ல
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன.

10 comments:

'))')) said...

u lined with awesome colors inside!!!

may b...could go 4 a better title?!

'))')) said...

//நம் முதல் நாள் உரையாடலில் - நீ
உயிர்த் தோழி என்றுரைத்த சொற்கள்
இப்போது - மெல்ல
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன.//

அருமையாய் இருக்கிறது கார்த்திகா

'))')) said...

வலைப்பூ தலைப்புப்படம் ரொம்ப பெருசா இருக்கு. அத கொஞ்சம் சரி பாருங்களேன்

'))')) said...

மாறாமல் இருப்பது மாற்றம் ஒன்று தான் ... அந்த மாற்றத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் ...

'))')) said...

உங்கள் தொனி மாறியிருக்கிறது கார்த்திகா. படிமம் நல்லா இருக்கு..

'))')) said...

கார்த்திகாவின் கவிதைகளில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

'))')) said...

கவிதை மிகப் பிடித்திருக்கிறது.

'))')) said...

அருமை

'))')) said...

//நம் முதல் நாள் உரையாடலில் - நீ
உயிர்த் தோழி என்றுரைத்த சொற்கள்
இப்போது - மெல்ல
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன //

சில நேரங்களில் என்னால் பதிவு செய்ய இயலாத வார்தைகளை பிறர் பதி்விடும் போது

அய்யூஊஊ என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது.

'))')) said...

/நம் முதல் நாள் உரையாடலில் - நீ
உயிர்த் தோழி என்றுரைத்த சொற்கள்
இப்போது - மெல்ல
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன./

நிதர்சனத்தை மிக அழகாய் மொழிந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.