Monday, March 09, 2009

கொடி ரோஜாக்கள்


ஓரிரு நாட்கள் பூக்கின்றன
இரண்டாம் மாடி பால்கனி தொட்டியில்
சிலவண்ண ரோஜாக்கள்.
முதல் மாடி பால்கனியில்
மலர்கின்றன அனுதினமும்
பலவண்ண ரோஜாக்கள்
இளம்தாய் உலர்த்தும்
சின்னஞ் சிறு உடைகளில்.

(C) karthikaneya@gmail.com

5 comments:

'))')) said...

vanakkam karthika !

ellavatraiyum Rasiththeen.

kuRippaaka ''மழை பெய்யாத மழை நாள்''

Anonymous said...

அன்பின் கார்த்திகா,

பூக்கின்றன...மலர்கின்றன... இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

உடைகளை ரோஜாக்களாக உருவகம் செய்திருப்பது கவித்துவம். அருமை.

இளம்தாய் என்றால்...பெற்ற அனுபவம் புதிது. மேலும் குழந்தைக்கு அடுக்கடுக்காக ஆசையில் துணிகளை வாங்கி குவிப்பார்..!

நன்று

அன்புடன்

'))')) said...

மிக அழகிய கவிதை.
வாழ்த்துக்கள்.

'))')) said...

இன்னும் ஒரு அழகான கவிதை.

'))')) said...

NAN RASIKKUM KAVITHAIKALAI EPPADI EZHUTHA KATRU KONDAI EN INIYA THOZHA ENAKUM SOLLIKODU KONJAM

SANJEEVKUMAR

CHETTIPALAYAM THAGAVEL SINEKITHAN