Sunday, September 14, 2008

காக்கை விடு தூது

கலைந்து போன தலையோடு
காலையிலேயே அவசரமாய் வந்த காகம்
வீட்டு வெளிச் சுவரில் அமர்ந்து
விருந்தினர்கள் வருவார்கள் எனக் கரைந்தது.
வெளியே செல்கிறோம்
நீ போய் நிறுத்திவிடு - என்று சொன்னேன்.
காஃபி தந்து அனுப்பலாம் என நினைக்கையில்
பறந்து சென்று விட்டது - பாவம்,
தூது சொல்ல வந்த காகம்.

5 comments:

'))')) said...

அச்சோ பாவம்..

'))')) said...

கற்பனை அபாரம். இயற்கைக் கவிஞர்னு உங்களுக்குப் பட்டம் கொடுக்கலாம்!!

'))')) said...

Ennai romba pugazhatheenga. (Manakkural: Aaha! kaathukku evlo inimaiya irukku) :)) Thank u Vijjinna & Saravana.

'))')) said...

//கலைந்து போன தலையோடு
காலையிலேயே அவசரமாய் வந்த காகம்
வீட்டு வெளிச் சுவரில் அமர்ந்து
விருந்தினர்கள் வருவார்கள் எனக் கரைந்தது.
//
சில சமயங்களில் மிக வேடிக்கையாக இருக்கும்! வீட்டு பெரியவர்களின் சாபத்துக்கு கூட ஆளாகும் காக்காகள் உண்டு!

பாவம் காக்கா! இன்னும் எத்தனை நாட்களுக்கு மட்டும் இந்த பணியினை செய்யப்போகிறதோ???

'))')) said...

Superb!

:)