Wednesday, September 03, 2008

என்னைக் குழந்தையாக்கிய கட்டில்

சதுரமும் அன்றி செவ்வகமும் அன்றி
நாற்கரமாய் இருந்தது
நான்கு படுக்கைகள் கொண்ட விடுதி அறை.
இடது சுவரோரமாய் இருந்த
எனது கட்டிலை
எப்படி திருப்பினாலும்
இடைவெளி இருந்தது
சுவருக்கும் கட்டிலுக்கும்.
வேறெப்படியும்
மாற்ற முடியுமா அல்லது
வேறு கட்டிலுக்கு நான்
மாறி விடுவதா என்றெண்ணியவாறே
தூங்கிப் போனேன்.
புரண்டு படுத்தபோது
கட்டில் இடைவெளியில்
கை விழுந்து ஊசலாடியது,
குப்புறப் படுத்துக்கொண்டு
தொட்டிலில் விளையாடிய
குழந்தை நாட்களை நினைவூட்டியது.
பின்
அப்படியே இருக்கட்டும் என
விட்டுவிட்டேன் கட்டிலை.

7 comments:

'))')) said...

குழந்தையாகுவது எல்லோருக்கும் பிடித்தமானதுதானே? கட்டில் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்..
அம்புடன் அருணா

'))')) said...

கவிதைகளைனைத்தும் அருமையிலும் அருமை

'))')) said...

ரொம்ப க்யூட்டான கவிதை...சூப்பர்!
:)

'))')) said...

வீணாபோனவன் கவிதைகள் மாதிரி இருக்கிறது.. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..
:))

'))')) said...

கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு,
கையைத் தொங்கவிட்டபடி, அதன் போக்கில் ஊசலாடவிடுவது, யாருக்குத்தான் பிடிக்காது?

வாழ்த்துக்கள் தங்கச்சி.

கவிதை வெகு அருமை!!

Anonymous said...

கவிதை அருமை.
அன்புடன்
-சூர்யா

'))')) said...

அழகா இருக்குங்க : )