விடுமுறை நாளொன்றில்
தெருவெங்கும் தூறல் போல் இலையுதிர்க்கும்
கீழை வீடுகளின் மரங்களின் உச்சியில்
வெயில் வீசும் நேரத்தில்,
வாசலில் அமர்ந்து - புத்தகம் ஒன்றை
வாசிக்கும் பாவனையில் கவனித்தேன்
சிறுமிகளால் நிறைந்து
களை கட்டும் என் தெருவை.
குட்டி மிதி வண்டி ஓட்டிச் செல்லும் ஒரு சிறுமி,
நெட்டிலிங்க மரத்தருகே கயிறாடும் ஒரு சிறுமி,
முற்றத்தில் கயிற்று ஊஞ்சல் ஆடுகிற ஒருத்தி,
எட்டி நின்று ஆட்டி விட அவள் பின்னே இன்னொருத்தி,
ரிங்கா ரிங்கா ரோசெஸ் ஆடுகிற மூவர்,
சுற்றி நின்று ரசிக்க அங்கு பல நேயர்,
தாயின் கை பற்றித் தத்திச் செல்லும் இங்கொருத்தி,
மாடியில் நின்று கொண்டு பட்டம் விடும் அங்கொருத்தி.
வாசிக்கும் பாவனையில்
கவனிக்கும் போது தோன்றியது
விடுமுறை நாளில் என் தெருவில்
வேறு யாருமே இல்லை சிறுமிகளன்றி.
கவிஞர் யாரேனும்
கடந்து சென்றால் என் தெருவைக்
கவிதையில் பதிவு செய்யக்கூடும்
சிறுமிகளால் நிறைந்திருக்கும் தெரு என்று.
எனது கவலை எல்லாம் ஒன்று தான்,
புத்தகம் வாசிக்கும் சிறுமியாக
பதிவு செய்யப்படலாம்
என் பெயரும் தவறாக என்று தான்.
Saturday, August 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
very nice
நல்லா இருக்கு..
:)
சரி.. நீங்களும் போய், உங்களுக்கு பிடித்தமாதிரி விளையாடுங்கள்.
நீங்கள் விரும்பிய மாதிரி பதிவு செய்யபடுவீர்கள்..
;)
ம்ம்ம்ம் நல்ல கவிதை - மகிழ்ச்சி பொங்க விளையாடும் சிறுமிகள் நிறைந்த தெருவினில் புத்தகம் வ(வா)சிக்கும் சிறுமியாக நீமட்டும் - அதிலும் இன்பம் காணுகிறாய் பராக்கு பார்த்துக் கொண்டே !
நல்வாழ்த்துகள்
Thank u, Ananth and Saravana. No one can accept me as their playmate. And said "Ponga aunty, neenga periya ponnu." What to do? :)
Thank u, Cheena sir for ur wishes. I'll be happy to welcome u often, in this blog. :)
கவிதை நல்லா இருக்கு,
அதைவிட // "Ponga aunty, neenga periya ponnu."//
இது சூப்பர்
Very nice.
:)
எனது கவலை எல்லாம் ஒன்று தான்,
புத்தகம் வாசிக்கும் சிறுமியாக
பதிவு செய்யப்படலாம்
என் பெயரும் தவறாக என்று தான்.
:)
//No one can accept me as their playmate. And said "Ponga aunty, neenga periya ponnu." What to do? :)//
"Ponga aunty"
;)
;)
Sweet poem. You are already captured in this poem itself :)
எனது கவலை எல்லாம் ஒன்று தான்,
புத்தகம் வாசிக்கும் சிறுமியாக
பதிவு செய்யப்படலாம்
என் பெயரும் தவறாக என்று தான்.
:)
nice
Post a Comment