Wednesday, December 09, 2009

பொய் புனை பருவம்

வியந்துகொண்டே இருக்கத்தான்
மாறுகின்றன பருவங்கள்;
மழைக் காலங்களில்
மழை பார்த்தும்
மற்ற காலங்களில்
மழை குறித்தும்.

இலையுதிர் காலங்களைக் குறித்து
வியப்பதற்கு ஏதுமற்றிருந்தது
சிறு தூறலை அது
நினைவூட்டும் வரை

பருவங்கள் எல்லாம் இப்போது
பொய் புனைந்து
நடமாடத் தொடங்கிவிட்டன
மழைப் பைத்தியம் கொண்டு...

(C) karthikaneya@gmail.com

9 comments:

'))')) said...

Nice one dear.

'))')) said...

//பருவங்கள் எல்லாம் இப்போது
பொய் புனைந்து
நடமாடத் தொடங்கிவிட்டன
மழைப் பைத்தியம் கொண்டு...//

நம்மை மாதிரியா?

'))')) said...

Me the First?

'))')) said...

நன்றாக இருக்கிறது.

'))')) said...

அழகா இருக்குங்க

'))')) said...

azhagu- kavithaiyum padamum

பூபதி said...

மறுபடியும் ஒரு மழைக்கவிதை..
அருமை..
பூபதி...

'))')) said...

இது ரொம்ப நல்லாயிருக்கு.

'))')) said...

நல்லாருக்கே!