
மறதியின் மீதொளிரும் வண்ணப்பூச்சு
துயருறுவதாகக் காட்டும் பழம்மரபு
ஏளனப்புன்னகையின் முகமூடி
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
சமாதான உடன்படிக்கை
போர் தொடுக்கும் முன்னான முரசறைதல்
தன்முனைப்பற்ற சரணடைதல்
குரூர தண்டனையின் ஒப்பனை முகம்...
யாதொன்றின் சங்கேதமாகவும்
சில பொழுதுகளில் வெளிப்படும் -
'மன்னித்து விடு'
(C) karthikaneya@gmail.com
6 comments:
இந்த ஒரு வார்த்தைய வச்சுகிட்டுதான் நிறையபேர் தப்பிச்சிட்டிருக்காங்க.
ரமணா திரைப்பட விஜயகாந்த் மாதிரி "மன்னிப்பு.... தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை" னு சொல்லிட வேண்டியதுதானே.
class..
beauty!
its easily said, hardly done.
Azhgu.. :)
Post a Comment