Saturday, January 24, 2009

விடுதிக் குறிப்பு - அடம்பிடிக்கும் தூக்கம்

பக்கத்தில் படுக்க வைத்து
தட்டிக் கொடுத்தாலும்
கட்டிப்போட்டாலும்
கதை சொல்லிப் பார்த்தாலும்
காலில் விழுந்து கேட்டாலும்
கண் மறைத்து ஓடிவிடும்.
எடுத்துக்கொள்ளச் சொல்லி
ஏங்குகிற குழந்தைபோல்
எல்லா அறைகளையும்
எட்டிப் பார்த்து ஏமாந்து
என்னிடமே திரும்புகையில்
இரவு விடிந்திருக்கும்.

(C) karthikaneya@gmail.com

2 comments:

Anonymous said...

நல்லா இருக்கு. இந்த மாதிரி நிறைய 'விடுதிக் குறிப்பு' கவிதைகள் நீங்கள் எழுத முடியும்.

சாதாரணமாக தூக்கம் இல்லாதவர்கள்தான் அலைந்து திரிவது வழக்கம். இந்தக் கவிதையில் தூக்கமே அலைந்து திரிகிறது. நல்ல படிமம்.

- வீணாப்போனவன்

'))')) said...

அம்மணி இம்புட்டு நாள் எங்கிட்டுப் போயிருந்தீக?

இரவை ஒரு குழந்தைபோல் செய்த உங்கள் கற்பனைக் கவுதை நல்லா இருக்கு.

உங்களுக்கு இயற்கைக் கழிஞர்னு பட்டம் கொடுக்கலாம் :-)

வாழ்த்துக்கள்