இலைகளில் பனித்துளிபோல்
வீழ்ந்து தூய்மையாக
மலர்களில் தேன்துளிபோல்
நுழைந்து இனிமையாக
குழந்தையின் முத்தம்போல்
தீண்டி மென்மையாக
கனவின் இசையைப்போல்
வழிந்து மயங்கச் செய்த
அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்!
(C) karthikaneya@gmail.com
Saturday, January 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்//
அருமை.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமே
நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/
மிக அழகான வர்னனையுடன் தொடங்கி அழகு குலையாமல் பயனித்து முடிவினில் துக்கமாக ...
உங்கள் கவிதை வரிகள்.
அருமை. திருக்குறள் ஞாபகம் வருகிறது.
எல்லா மழையும் மழையல்ல - சான்றோர்க்கு
நெல்லை மழையே மழை.
தொல்காப்பியம் கூட ஞாபகம் வருகிறது. பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று விடுகிறேன்.
- வீணாப்போனவன்
பி.கு. - பனித்துளி அருமையான படிமம்.
மழை...மழை...மழை...எல்லா மழையும் மழையல்ல...ரொம்ப சரி தான் .
Post a Comment