Saturday, October 02, 2010

காட்சிப் பிழை

சமீபத்தில் வெளியான
புதிய திரைப்படத்தில்
முதன்முறை
லைட்மேனாக இயங்கியவன்
உறவினர்களை அழைத்துக்கொண்டு
படம் பார்க்கச் சென்றான்.
எந்தத் திரையரங்கிலும் காட்டப்படவில்லை
கடைசிக் காட்சிக்குப் பிறகு
காண்பிக்கப்படும் பெயர்ப்பட்டியல்.
ஒரு திருட்டு வி.சி.டி. வாங்கி
கடைசிக் காட்சியிலிருந்து போட்டுக்காட்டினான்
அத்திரைப்படத்தை.
அவன் உறவினர் வீடுகளுக்குப்
பயணித்துக் கொண்டிருக்கிறது இப்போது
கடைசிக் காட்சியிலிருந்து துவங்கும்
அப்படத்தின் வி.சி.டி.

(c) karthikaneya@gmail.com

4 comments:

'))')) said...

நல்லா இருக்கு கவிதை

'))')) said...

summa nacchunu irruku

'))')) said...

நல்லாயிருக்குங்க.

'))')) said...

மிக சாதாரணமாக தோன்றினாலும் , இதில் பல விஷயங்கள் தெரிகிறது.
ஒரு கலைஞனின் ஆரம்பம் எப்படி (negative)முடிவில் காட்டப்படுகிறது.
அந்த முடிவை தொடக்கமாக மாற்ற (Positive) அவன் என்ன செய்கிறான்?

Excellent!