Monday, September 20, 2010

மலை என்கிற சூனியக்காரி

இயற்கையின் அன்பை
மொழிபெயர்த்துக்கொண்டிருந்த
மலையின் பாடலைக்
கேட்கப் போனேன் ஓர்நாள்.
அணைத்துக்கொள்ள தோள்களை விரித்திருந்த
மலையின் மடிகளும் கரங்களும்
எண்ணத் தொலையவில்லை.

தட்டாம் பூச்சியின் சிறகு வழி
வானம் பார்த்துக்கொண்டு போன என்னை
தாலாட்டித் தோளில் சாய்த்துக்கொண்ட மலையைக்
கட்டிக் கொள்ளப் பொங்கியது அன்பு - என்னைக்
கரைத்துக் கொண்டு.
தாய் மரத்தைக் கட்டிக் கொள்ள
ஆசைகொண்ட வேப்பம்பூவாய்
மலையின் நிழலில் நான்
மயங்கிக் கிடக்கிறேன் இப்போது.


(c) karthikaneya@gmail.com

2 comments:

'))')) said...

மலை என்கிற சூனியக்காரி
என்று சொல்வதைவிட
மலை என்கிற தாய்
என்று சொன்னால்
பொருத்தமாயிருக்கும்
என்பது என் அபிப்ராயம்.

'))')) said...

ம‌துமிதாவை ஆமோதிக்கிறேன்