Monday, April 26, 2010

தற்செயல் தவறுகள்

தற்செயலான ஒரு மழைத் திவலை போல்
பரிசுத்தமான
புன்னகையை,
நேயத்தை,
ஏக்கத்தை,
கண்ணீர்த் துளியை,
பிறப்பை,
இறப்பை,
பிரிவை,
முத்தத்தை,
கோபத்தை,
தியாகத்தை,
துரோகத்தை,
மன்னிப்பை…
மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின
பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே.

ஒரு எதிர்பார்ப்பில்
ஒரு காத்திருப்பில்
ஒரு அலட்சியத்தில்
ஒரு நிராகரிப்பில்
ஒரு புறக்கணிப்பில்
ஒரு போலச்செய்தலில்
புனிதத் தன்மையை இழந்துவிடுகின்றன யாவுமே…

முன்னரே உணர்ந்திருந்தால்
தவற விட்டிருப்பாயா…
உன் சொற்கள்
என்னை மகிழ்த்தியிருக்கக்கூடும்
ஒரு தருணத்தை..?

(C) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

இப்படித் தவறவிட்டவை
அனேக கோடியிருக்கும்.

'))')) said...

தற்செயலாக படிக்க நேர்ந்த அருமையான கவிதை. வாழ்த்துகள் குட்டிம்மா.

'))')) said...

/ஒரு போலச்செய்தலில்/


புதிய முயற்சி..


அழகான கவிதை...