Monday, April 26, 2010

ரகசிய வாசல்கள்

யாராரோ அறியக் கிடைத்தபின்னும்,
நான் நம்புதற்கில்லை
உன் ரகசியங்கள் ஏதும்
என்னிடத்தில் இருப்பதாய்.

தடயங்களை அழிப்பது வீண் வேலை.
உன் ரகசியத்தின் வாசல்கள்
பலவீனமானவை
எப்போதும் திறந்திருப்பவை.
அவற்றை என்னால்
காவல் செய்ய இயலாது.

அன்பு ஒன்றைத் தவிர
யாதொரு பயனுமில்லை
என் சொல்லிலும் செயலிலும்.

உள்ளே என்னை அனுமதிக்காதிருக்க
யோசிக்க சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன.
உன் உலகத்தில் எனக்கோர் இடம்
உனக்கெப்போதும் ஆபத்துதான்!

(C) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

அன்பு ஒன்றைத்தவிர
யாதொரு பயனுமில்லை.
நல்ல கவிதை.

'))')) said...

ந‌ல்ல‌ க‌விதை கார்த்திகா

'))')) said...

//தடயங்களை அழிப்பது வீண் வேலை.
உன் ரகசியத்தின் வாசல்கள்
பலவீனமானவை
எப்போதும் திறந்திருப்பவை.
அவற்றை என்னால்
காவல் செய்ய இயலாது//

இதைப் படித்ததும் ஏதோதோ மனதை பிசைகிறது.

மனங்களின் ஆழங்களை அலசிச் செல்லும் தெளிந்த கவிதை.