Monday, July 14, 2008

குட்டித் தவளை நினைத்தது

அதிகாலை எழுந்து பின்முற்றக் கதவைத்
திறந்த போது பார்த்தேன்.
அரையளவு நிரம்பிய சிவப்பு நிற வாளியில்
அழுக்குப் பச்சை நிறக் குட்டித் தவளை ஒன்று
அசைந்து கொண்டிருந்தது.
அவ்வளவு பெரிய வாளியில்
அது எப்படி விழுந்திருக்கக் கூடும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
எப்படி வெளியேறுவது என்று
நினைத்திருக்கக் கூடும் அக்குட்டித் தவளை
என்னை முறைத்த போது.

4 comments:

'))')) said...

கார்த்திகா,
உங்களை கற்பனையில் அடிச்சுக்க ஆளே கிடையாது.
ஒரு குட்டித் தவளையின் பார்வையே உங்களுக்கு முறைப்பது மாதிரி இருக்கிறதா?

\\அதிகாலை எழுந்து பின்முற்றக் கதவைத்
திறந்த போது பார்த்தேன்.\\
அதிகாலை வேளையில் பின்முற்றக் கதவு. பின் வாசல் தெளித்துவிட்டுத்தான் முன் வாசலை தெளிக்கும் வழக்கமோ?

'))')) said...

மன்னிக்கவும்,
கற்பனை பண்ணி பாக்கும்போதே கொஞ்சம் அருவருப்பா இருக்கு...

'))')) said...

உங்களை முறைத்த தவளை வெளியேறியதா வாளியிலிருந்து????

Anonymous said...

This poem is like a tom-and-jerry cartoon movie. Pure fun :)