Monday, July 07, 2008

மென்பொருள் நிறுவனப் பணியில் சட்டையில் படியும் சன்னமான அழுக்கைத் துவைத்துப் போட அமைந்தவள்

(முன் வேண்டுகோள்: இது எனது நண்பன் ஒருவனுடைய கனவு. அதைக் கொஞ்சம் கவிதை நடையில் கற்பனை கலந்து சொல்லி இருக்கிறேன். எனவே மென்பொருள் நிறுவனப் பணி புரியும் நண்பர்கள் வன்பொருள்களைத் தேட வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.)

அடிக்கடி அருந்தும் வாழைப்பழ பால்கூழ் நிறத்தில்
ஆளை வசீகரிக்கும் அழகில்
இடை வரை நீண்ட கூந்தலோடு
ஈருடலும் இவனுயிருமாய் வாழும் நினைவோடு
உலக விடயங்கள் பேசும் ஞானத்தோடு
"ஊம்" மட்டும் சொல்லத் தெரிந்தவளாய்
எதையும் சகிக்கும் பொறுமையோடு
ஏனென்று கேள்வி கேட்காதவளாய்
ஐயத்திற்கு அப்பாற்பட்டவளாய்
ஒரு சுபமுகூர்த்த நாளில்
ஓம்படைக் கிளவியினூடே
ஔவை போலும் (அதை மறந்தேனே) கிடைத்தாள்
உனக்கொரு குலப் பெண்.

8 comments:

'))')) said...

\\"ஊம்" மட்டும் சொல்லத் தெரிந்தவளாய்
எதையும் சகிக்கும் பொறுமையோடு\\
இப்பல்லாம் அப்படி யாரும் கிடைக்கறதே இல்லைங்க. லட்சத்தில் ஒன்று தான் இப்படி இருக்கும்.

\\இடை வரை நீண்ட கூந்தலோடு\\
தோளுக்குக் கிழே கூந்தல் உள்ள பார்டிங்களைக் கூட காண முடியலை. இடை வரை நீண்ட கூந்தலா, இதெல்லாம் லெமூரியா கண்டத்தோட காணாமல் போன species :)


பி.கு. உங்கள் கவிதை மிக அழகாக (சற்றே கசப்பான)உண்மையைச் சொல்கிறது.

'))')) said...

\\அடிக்கடி அருந்தும் வாழைப்பழ பால்கூழ் நிறத்தில்
ஆளை வசீகரிக்கும் அழகில்\\

கருப்பழகி கேள்விப்பட்டதில்லையா?

\\உலக விடயங்கள் பேசும் ஞானத்தோடு
"ஊம்" மட்டும் சொல்லத் தெரிந்தவளாய்\\

உலக விடயங்கள் பேசும் எப்பெண்னும் "ஊம்" மட்டுமே சொல்வது இல்லை.அவளின் கருத்தை கண்டிப்பாக கூறுவாள். ஆனால் கூறும் விதம் வேறு படலாம்.

கவிதை எப்பொழுதும் போல் அழகு :) என்னுடைய தளத்தை உங்களின் தளத்தில் குறிப்பிட்டதிற்க்கு நன்றி :)

'))')) said...

\\
விஜய் said...
\\"ஊம்" மட்டும் சொல்லத் தெரிந்தவளாய்
எதையும் சகிக்கும் பொறுமையோடு\\
இப்பல்லாம் அப்படி யாரும் கிடைக்கறதே இல்லைங்க. லட்சத்தில் ஒன்று தான் இப்படி இருக்கும்.
\\


விஜய் இது உங்க cute Wife-க்கு தெரியுமோ??? இல்லேன்னா சொல்லிடுங்க ஒரு Call பண்ணிடலாம் :P

'))')) said...

விஜயின் கருத்தே எனதும்...

'))')) said...

Thank u Ramya, for ur comments. Girls r there as u said and more than that too. But I just said about my friend's expectations. He will search me with great rage for doing this. What to do? Pothu vaazhkkaiyila ithellam saatharanam. :)

'))')) said...

நாங்க அப்படியெல்லாம் கிடையாது-னு பயங்கர எதிர்ப்பு கிளம்பும். அதை எப்படி சமாளிக்கறது-னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் சொல்றதுலயும் கொஞ்சம் உண்மை இருக்குது-னு ஆதரவளித்த விஜய்-க்கும் முகுந்தனுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருவதற்கும் எனது நன்றிகள்.

'))')) said...

\\Ramya Ramani said...
விஜய் இது உங்க cute Wife-க்கு தெரியுமோ??? இல்லேன்னா சொல்லிடுங்க ஒரு Call பண்ணிடலாம் :P\\

என் எதிரி லிஸ்ட் ஏறிட்டே போகுதே :)
ரம்யா நீங்க சொன்னதைத் தானே நானும் சொன்னேன். இப்படியெல்லாம் ஊம் கொட்டுற பொண்ணுங்க கிடையாதுன்னு. என்ன தாயி சேம் சைட் கோல் போடறீயளே :)

'))')) said...

\\விஜய் said...
\\Ramya Ramani said...
விஜய் இது உங்க cute Wife-க்கு தெரியுமோ??? இல்லேன்னா சொல்லிடுங்க ஒரு Call பண்ணிடலாம் :P\\

என் எதிரி லிஸ்ட் ஏறிட்டே போகுதே :)
ரம்யா நீங்க சொன்னதைத் தானே நானும் சொன்னேன். இப்படியெல்லாம் ஊம் கொட்டுற பொண்ணுங்க கிடையாதுன்னு. என்ன தாயி சேம் சைட் கோல் போடறீயளே :)
\\

எங்களுக்கும் நேரம் போக வேண்டாமா.. :P நான் எல்லருக்குமே இனிய நண்பி தாங்க..எதிரி எல்லாம் இல்லங்க