Monday, December 21, 2009

மரபுவழிக் கதைகள்

தீர்த்தக்கரைகளோடு
பேசிச் செல்லும்
தீராத கதைகளைக்
கடலில் சேர்க்கின்றன நதிகள்.
ஆதிநாள் முதல்
அவற்றைத்தான் ஓயாமல்
அலைகள் சொல்கின்றன
கரைகளுக்கு.
அதன்பிறகுதான்
குவியத் தொடங்கின
மணல்வெளியெங்கும்
மரபுவழிக் கதைகள் .
(C) karthikaneya@gmail.com

9 comments:

'))')) said...

great one. :)

'))')) said...

ரொம்ப நல்லா இருக்குடா.

'))')) said...

\\தீர்த்தக்கரைகளோடு
பேசிச் செல்லும்தீராத கதைகளைக்கடலில் சேர்க்கின்றன நதிகள்.\\
ஒரு வாவ் போட வைக்கின்றன உங்கள் வரிகள் :)

'))')) said...

நல்ல கவிதை தொடருங்கள்...

'))')) said...

எனது வலைப் பூவானது
கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்

'))')) said...

அலை ஏன் கதை சொல்கிறதென
நீ சொல்லும் கதை நன்றாக இருக்கிறது.
வரவர நீ நல்லா கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட....

'))')) said...

அலை ஏன் கதை சொல்கிறதென
நீ சொல்லும் கதை நன்றாக இருக்கிறது.
வரவர நீ நல்லா கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட....

'))')) said...
This comment has been removed by the author.
'))')) said...

Nice... :)