Monday, September 20, 2010

கலாப்ரியாவின் தாலாட்டு

புதிய ஊருக்கு இடம் மாறிச் செல்கையில்
நினைவின் தாழ்வாரங்கள் வாசித்தபடி சென்றேன்.
சொந்த ஊர் குறித்த
ஞாபக வீட்டின் கதவுகள்
திறந்துகொண்டன.
தமிழ்ச்சங்கம் தெருவான
சொக்கலிங்க முடுக்குத் தெருவில் இறங்கி
வளவுப் பிள்ளைகளோடு
தொட்டுப்பிடித்து விளையாடி
தோற்றுப் போன சடவு தீர
நினைவின் தாழ்வாரங்களில் தலை வைத்து
கனவின் தாழ்வாரங்களில் உறங்கத் தொடங்கினேன்.
மிச்ச பயணம் முழுதும்
எனைத் தாலாட்டிக் கொண்டு வந்தது
ரயிலோ கலாப்ரியாவோ
நானறியேன் புதுநகரே…

(c) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

இன்னும் படிக்க வில்லை.
ஆர்வத்தைத் தூண்டுகிறது.

'))')) said...

க‌லாப்ரியாவின் எந்த‌ புத்த‌க‌த்தை சொல்கின்றீர்க‌ள் நேய‌முகில்

'))')) said...

இது பெங்களூரு பயணத்தின் நினைவுகளா?